ADDED : ஜூலை 11, 2024 05:20 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பகுதிகளில் தனியார் உடற்பயிற்சி மையங்கள் பல உள்ளன. அங்கு அதிக கட்டணம் செலுத்தி உடற்பயிற்சி செய்ய வேண்டி உள்ளது.
அப்பகுதிகளில் ஏராளமான விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் கட்டணம் செலுத்தி உடற்பயிற்சி மையங்களுக்கு செல்ல இயலாத நிலையில் உள்ளனர். அவர்கள் பூங்காக்களில் உள்ள ஒன்று அல்லது இரண்டு சாதனங்களில் உடற்பயிற்சி செய்கின்றனர். அவர்களின் தேவைக்கேற்ற உபகரணங்கள் போதுமானதாக இல்லை.
அதனால் மாநகராட்சி சார்பில் இலவச உடற் பயிற்சி மையம் அமைக்கப்பட வேண்டும் என கருதுகின்றனர். 'மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, இளைஞர்கள் தெரிவித்தனர்.