/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மக்களுக்காக சசிகலா என்ன செய்தார்? உதயகுமார் கேள்வி மக்களுக்காக சசிகலா என்ன செய்தார்? உதயகுமார் கேள்வி
மக்களுக்காக சசிகலா என்ன செய்தார்? உதயகுமார் கேள்வி
மக்களுக்காக சசிகலா என்ன செய்தார்? உதயகுமார் கேள்வி
மக்களுக்காக சசிகலா என்ன செய்தார்? உதயகுமார் கேள்வி
ADDED : ஜூலை 18, 2024 10:53 PM
மதுரை: ''ஜெயலலிதாவுடன் இருந்து சசிகலா தன்னை வளர்த்துக்கொண்டாரே தவிர மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. பழனிசாமி முதல்வர் ஆனது எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவில் தான்' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
மதுரையில் நேற்று அவர் கூறியதாவது:
ஆடி மாதத்தில் சுற்றுப்பயணம் என்ற பெயரில் சுற்றுலா பயணம் சென்றுள்ளார் சசிகலா. கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது. அ.தி.மு.க., தொண்டர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தருணம். சிலரின் உள்ளடி வேலைகள் காரணமாகவே அ.தி.மு.க., ஆட்சியை இழந்தது. 33 ஆண்டு காலம் ஜெயலலிதாவுடன் இருந்து ஆட்சி நிர்வாகத்தை கவனித்ததாக சொல்லிக் கொண்டிருக்கிறார் சசிகலா. அவர் சார்ந்த சமூக மக்களுக்காக ஏதாவது செய்ததாக சொல்ல முடியுமா. ஜெயலலிதாவின் பின்புலத்தை காட்டி சுயநலமாக தன்னை தான் வளர்த்துக் கொண்டார்.
திருநாவுக்கரசர், காளிமுத்து, சேடபட்டி முத்தையா போன்றோரின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியானதற்கு யார் காரணம். இதை எந்த மேடையிலும் விவாதிக்க தயார். வசதி இருந்தும், வாய்ப்பு இருந்தும் சசிகலா மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவால்தான் பழனிசாமி முதல்வர் ஆனார்.
அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என சொன்னார் சசிகலா. இப்போது திடீரென மீண்டும் அரசியலுக்கு வருகிறேன் என்கிறார். எந்த வார்த்தையை நம்புவது. அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என உண்மையிலேயே நினைத்தால் ஜானகி போல் சசிகலாவும் ஒதுங்கிக்கொண்டு வாழ்த்து தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.