ADDED : ஜூலை 08, 2024 12:27 AM

பேரையூர் : பேரையூர் பகுதிகளில் ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஒட்டுரக ஜம்பு நாவல் பழங்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன.
தற்போது நாட்டு நாவல் பழங்களின் வரத்து தொடங்கிய நிலையில் ஜம்பு நாவல் வரத்து குறைந்து விட்டது. ஜூலை முதல் ஆகஸ்ட் வரை நாவல் பழம் சீசன். பேரையூர் பகுதியில் கிலோ ரூ.200க்கு விற்கப்படுகிறது. அதிக விளைச்சலால் விற்பனை சூடு பிடித்துள்ளது.