/உள்ளூர் செய்திகள்/மதுரை/ முன்னாள் தாளாளர் முன்ஜாமின் தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு முன்னாள் தாளாளர் முன்ஜாமின் தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் தாளாளர் முன்ஜாமின் தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் தாளாளர் முன்ஜாமின் தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் தாளாளர் முன்ஜாமின் தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜூன் 20, 2024 04:56 AM
மதுரை: மதுரையில் பாலியல் வழக்கில் தனியார் பள்ளி முன்னாள் தாளாளரின் முன்ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
நரிமேடு நேரு வித்யாசாலை பள்ளியில் உபரி ஆசிரியர்கள் சிலர் இருந்ததால் இதர பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை இடமாறுதல் செய்தது. மீண்டும் அவர்கள் நேரு வித்யாசாலை பள்ளிக்கு திரும்பினர். முன்னாள் தாளாளர் சேத் டேனிராஜ் அனுமதிக்கவில்லை. பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் தலையிட்டதால் ஒரு ஆசிரியை அனுமதிக்கப்பட்டார். அவரை சட்டவிரோதமாக தடுத்து, ஆபாசமாக பேசி, மிரட்டல் விடுத்து, வன்கொடுமை செய்ததாக சேத் டேனிராஜ் உட்பட சிலர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிந்தனர். பாலியல் துன்புறுத்தல் செய்ததாக மற்றொரு ஆசிரியை அளித்த புகாரில் வேறு வழக்கு பதியப்பட்டது.
சேத் டேனிராஜ், தலைமையாசிரியை ேஹமா அருளானந்தம் உட்பட 7 பேர் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு: ஒரு ஆசிரியரின் உறவினர் பிரேமா. பள்ளி நிர்வாகியாக இருந்தார். அவர் நீக்கப்பட்டார். அவர் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. அவருடன் கூட்டுச் சேர்ந்து சம்பந்தப்பட்ட ஆசிரியைகள் எங்களுக்கு எதிராக பொய் புகார் அளித்துள்ளனர். சம்பவத்திற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை. முன்ஜாமின் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.
நீதிபதி பி.புகழேந்தி: குற்றச்சாட்டின் தீவிரம் கருதி சேத் டேனிராஜின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மற்றவர்களுக்கு முன்ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. அவர்கள் தேவையானபோது போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.