ADDED : ஆக 05, 2024 06:12 AM
உசிலம்பட்டி: உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் குறுவட்ட பள்ளிகளுக்கு இடையேயான இறகுப்பந்து (ஷட்டில் பேட்மின்டன்) போட்டிகள் நடந்தது.
தலைமை ஆசிரியர் பரமசிவம் துவக்கி வைத்தார். 14 மற்றும் 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள், மாணவியர் பிரிவில் உசிலம்பட்டி எஸ்.டி.ஏ., பள்ளி அணியினர் வென்றனர். 19 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில் உத்தப்பநாயக்கனுார் ரத்தினசாமி நாடார் பள்ளி அணி, மாணவியர் பிரிவில் உசிலம்பட்டி எஸ்.டி.ஏ., பள்ளி அணியினர் வெற்றி பெற்றனர்.