ADDED : ஜூன் 28, 2024 12:28 AM
மதுரை: மதுரை சிம்மக்கல் தமிழ்நாடு பிராமணர் சங்க அலுவலகத்தில் வீர வாஞ்சி நாதனின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
வாஞ்சிநாதனின் உருவப்படத்திற்கு மாநில மூத்த துணைத் தலைவர் இல.அமுதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துணைப் பொதுச்செயலாளர் பக்தவத்சலம் முன்னிலை வகித்தார்.கொள்கை பரப்புச் செயலாளர் வெங்கடேஷ், மாவட்ட பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், செயலாளர்கள் சந்திரசேகர், சேஷகிரி, புதுார் கிளைத் தலைவர் ராஜகோபால், பொருளாளர் விஜயன், நாராயணன் உள்பட பலர் பங்கேற்றனர்.