/உள்ளூர் செய்திகள்/மதுரை/ திருமங்கலத்தில் நாய்களுக்கு தடுப்பூசி திருமங்கலத்தில் நாய்களுக்கு தடுப்பூசி
திருமங்கலத்தில் நாய்களுக்கு தடுப்பூசி
திருமங்கலத்தில் நாய்களுக்கு தடுப்பூசி
திருமங்கலத்தில் நாய்களுக்கு தடுப்பூசி
ADDED : ஜூன் 03, 2024 03:18 AM
திருமங்கலம்: திருமங்கலம் நகர் பகுதியில் சுற்றியும் தெருநாய்களுக்கு வெறி பிடிக்காமல் இருக்க தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
திருமங்கலத்தில் நாய் கடித்ததாக மே மாதத்தில் ஆயிரம் பேருக்கு மேல் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதையடுத்து நகர் பகுதியில் சுற்றி திரியும் நாய்களை கணக்கெடுக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்தது. இதில் நகராட்சியில் மட்டும் 586 தெருநாய்கள் இருப்பது தெரிந்தது. இந்த நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி, தோல் நோய் தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. திருமங்கலம் கால்நடை மருத்துவமனையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
நகராட்சி சார்பில் தனிப்படையினர் நேற்று பிடித்த 72 நாய்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. அந்த நாய்களுக்கு நெற்றியில் அடையாள மை வைக்கப்பட்டது. கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் ஜோசப் அய்யாத்துரை, நகராட்சி கமிஷனர் அசோக்குமார், சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.