/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தகுதியில்லாதவற்றை துாக்கி எறிய வேண்டும் ஆன்மிக சொற்பொழிவில் திருச்சி கல்யாணராமன் பேச்சு தகுதியில்லாதவற்றை துாக்கி எறிய வேண்டும் ஆன்மிக சொற்பொழிவில் திருச்சி கல்யாணராமன் பேச்சு
தகுதியில்லாதவற்றை துாக்கி எறிய வேண்டும் ஆன்மிக சொற்பொழிவில் திருச்சி கல்யாணராமன் பேச்சு
தகுதியில்லாதவற்றை துாக்கி எறிய வேண்டும் ஆன்மிக சொற்பொழிவில் திருச்சி கல்யாணராமன் பேச்சு
தகுதியில்லாதவற்றை துாக்கி எறிய வேண்டும் ஆன்மிக சொற்பொழிவில் திருச்சி கல்யாணராமன் பேச்சு
ADDED : ஜூன் 07, 2024 06:23 AM
மதுரை: தகுதியில்லாதவற்றை துாக்கி எறிய வேண்டும்'' என ஆன்மிக சொற்பொழிவில் திருச்சி கல்யாணராமன் பேசினார்.
மதுரை தியாகராஜர் கல்லுாரி, அனுஷத்தின் அனுக்கிரகம் ஆகியவை சார்பில் கருமுத்து கண்ணன் நினைவாக கம்பராமாயண தொடர் சொற்பொழிவு நடக்கிறது. தியாகராஜர் கலை, அறிவியல் கல்லுாரியில் நடக்கும் இந்நிகழ்ச்சியில் திருச்சி கல்யாணராமன் பாதுகா பட்டாபிஷேகம் என்ற தலைப்பில் பேசியதாவது:
எம்பெருமான் ராமன் திருவடியே சரண் என்று இருக்கிற பரதனை குகன் பாராட்டுகிறான். உன் பெருமைக்கு நிகர் எதுவுமில்லை' என்கிறான். கம்பராமாயணம், மகாபாரதம், நாலாயிர திவ்யபிரபந்தம், திருக்குறளுக்கு நிகராக உலகில் எதுவுமில்லை.
நமக்கு தகுதியில்லாத ஒன்றை துாக்கி எறிய வேண்டும். தகுதி உள்ளதை மற்றவர்களுக்கு கொடுக்க நினைத்தால் உடனே கொடுக்க வேண்டும். ராமர் அப்படி கொடுத்தார்.
ஒரு விஷயத்தில் ஈடுபடும்போது அது உடனே முடியும் என்று நினைக்கக் கூடாது. உணர்ச்சி வசப்பட்டு வேகமாக பேசுபவர்களிடம் நாம் பேசக்கூடாது. அதை தவிர்க்க வேண்டும். ராம துாதன் ஆஞ்சநேயர்.
ஆனால் ராமனுக்காக பூமாதேவிக்கு துாது போனான் பரதன். தாய், தந்தையர் நம்மோடு இருக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். பகவான் நாமாவை விட திருவடி முக்கியம். பகவான் திருவடியை சிக்கென பிடித்துக் கொள்ள வேண்டும்.
பாதுகா சகஸ்ரம் என்று பாடல்களை பாடினார் சுவாமித வேதாந்த தேசிகர். ஒரு காரியத்தை செய்யும்போது அதை செய்யலாமா என்று மனைவியிடம் கேட்க வேண்டும்.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர், நீந்தார் இறைவனடி சேராதார்' என்று முதன்முதலில் ஆதார் கொண்டு வந்ததே திருவள்ளுவர்தான். நாம் செய்த பாவம் நீங்க ஸ்ரீராமன் தயவு வேண்டும். இறைவன் திருவடியே உயர்ந்தது.
இவ்வாறு அவர் பேசினார்.
இச்சொற்பொழிவு ஜூன் 16 வரை தினமும் மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை நடக்கிறது.