ADDED : ஆக 02, 2024 05:02 AM

மதுரை: மதுரையில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட அரசு தணிக்கையாளர்களுக்கான பயிற்சி வேளாண் கல்லுாரி கூட்டரங்கில் நடந்தது.
பயிற்சியை கலெக்டர் சங்கீதா துவக்கி வைத்தார். கூட்டுறவு தணிக்கை அலுவலர் சித்ரகலா, உள்ளாட்சி நிதி தணிக்கை இணை இயக்குனர் சரவணகுமார், வேளாண் கல்லுாரி முதல்வர் மகேந்திரன், கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய இயக்குனர் சத்யகுமார் பங்கேற்றனர்.