ADDED : ஜூன் 15, 2024 06:23 AM
மதுரை : சேடபட்டி சூலப்புரத்தில் 'அட்மா' திட்டத்தின் கீழ் கிராம முன்னேற்றக்குழு விவசாயிகளுக்கான பயிற்சி நடந்தது.
அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, டிரைக்கோடெர்மா விரிடியின் பயன்கள் குறித்து தொழில்நுட்ப மேலாளர் கணேசராஜா, வேளாண் துறையின் மத்திய மாநில மானிய திட்டங்கள் குறித்து துணை வேளாண் அலுவலர் பாண்டியன், மண் பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்து வேளாண் அலுவலர் மணிமேகலை பேசினர். உதவி அலுவலர் முத்தையா நன்றி கூறினார். உதவி தொழில்நுட்ப மேலாளர் சத்தியா ஏற்பாடுகளை செய்திருந்தார்.