ADDED : ஜூலை 03, 2024 05:54 AM
வாடிப்பட்டி : பூச்சம்பட்டியில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் வேளாண் முன்னேற்ற குழு உறுப்பினர்களுக்கு காரீப் பருவ பயிற்சி நடந்தது.
உதவி இயக்குனர் பாண்டி துவக்கி வைத்தார். வேளாண் உதவி பொறியாளர் காசிநாதன் துறை சார்ந்த திட்டங்கள் குறித்தும், துணை அலுவலர் பெருமாள் விரிவாக்க மையத்தில் உள்ள இடுபொருட்கள், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை உதவி அலுவலர் கந்தசாமி ஒழுங்குமுறை விற்பனை நிலைய செயல்பாடுகள் குறித்தும், ஏ.ஆர்.இ., தொண்டு நிறுவன பயிற்சியாளர் கர்ணன் பயிர் சாகுபடி குறித்தும் விளக்கினர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரியா நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி மேலாளர் பூமிநாதன், அருணா தேவி செய்திருந்தனர்.