ADDED : ஜூன் 28, 2024 12:32 AM
கோயில்
வைகாசி உற்சவம் நிறைவு பூஜை: முனியாண்டி சுவாமி கோயில், 2, யூனியன் பாங்க் காலனி 4வது தெரு, விளாங்குடி, வருஷாபிஷேகம், 8ம் நாள் மறு பூஜை, இரவு 7:00 மணி.
ஆன்மிக ஒருமைப்பாடு பிரார்த்தனை: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட்பிரகாச வள்ளலார், மாலை 5:30 மணி.
இடைவிடா சகாய அன்னை சர்ச் பொன்விழா - நவநாள் திருப்பலி: அஞ்சல் நகர், மதுரை, தலைமை: முன்னாள் பாதிரியார்கள், ரட்சகர் சபை பாதிரியார்கள், மாலை 5:45 மணி.
பக்தி சொற்பொழிவு
லலிதா சகஸ்ரநாம பாராயணம், காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
சகஸ்ரநாமம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
திருக்குறள்: நிகழ்த்துபவர் - ராமச்சந்திரன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
நாராயணீயம்: நிகழ்த்துபவர் - சுப்புராமன், வேதாந்த சிரவணானந்தா ஆஸ்ரமம், 4, கீழ மாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, மாலை 6:30 மணி.
ஸ்ரீ மத் ராமாயணம் - சுந்தர காண்டம்: நிகழ்த்துபவர் - முரளி, மதன கோபால சுவாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, மாலை 6:15 மணி முதல் இரவு 8:30 மணி வரை.
பொது
கவுன்சிலர்கள் கூட்டம்: மாநகராட்சி அலுவலகம், மதுரை, தலைமை: மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் தினேஷ்குமார், காலை 10:30 மணி.
கைத்தொழில்கள் சுய வேலைவாய்ப்பு பயிற்சி: காந்தி மியூசியம், மதுரை, பயிற்சி அளிப்பவர்: காந்தி மியூசியம் கல்வி அலுவலர் நடராஜன், காலை 10:20 மணி.
மாதாந்திர சர்வ சமய வழிபாடு: காந்தி மியூசியம், மதுரை, நடத்துபவர் - காந்தி மியூசியம் முதல்வர் தேவதாஸ், மாலை 4:30 மணி.
சர்வ சமய அமைதி பிரார்த்தனை: பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சி மையம், 24, குமாரசாமி ராஜா தெரு, செனாய்நகர், மதுரை, தலைமை: செப்சிரா மையம் தலைவர் மோகன், அருட்செய்தி: தாசில்தார் நிலம் எடுப்பு தேசிய நெடுஞ்சாலை அதிகாரி பாலாஜி, ஏற்பாடு: சேவாலயம் மாணவர் இல்லம், மாலை 6:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை.
நேர்மையாளர் கடையின் 20ம் ஆண்டு நிறைவு விழா, இலக்கிய மன்றங்களின் துவக்கவிழா, புதிய மாணவர்கள் வரவேற்பு விழா: புனித கிளாரட் மேல்நிலைப்பள்ளி, கருமாத்துார், தலைமை: முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, காலை 9:30 மணி.
பள்ளி, கல்லுாரி
முதலாமாண்டு மாணவர்களுக்கான புத்தாக்க நிகழ்வு - ஐந்தாம் நாள்: சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி, டி.வி.ஆர்., நகர், அருப்புக்கோட்டை ரோடு, மதுரை, காலை 9:30 மணி.
தொழில் வழிகாட்டுதல் கருத்தரங்கு: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: தொழில்முறை வேலைவாய்ப்பு தொழில் வழிகாட்டுதல் மையம் உதவி இயக்குனர் கலைச்செல்வம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் செந்தில்நாதன், இளைய வேலைவாய்ப்பு அதிகாரி லட்சுமி, ஏற்பாடு: மக்கள் தொடர்பு, தொழில் வழிகாட்டுதல், தொழில்முறை வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் பிரிவு, காலை 11:00 மணி.
உங்கள் எதிர்காலத்தை திறக்க- பட்டய கணக்காளர் தொழில் குறித்து கருத்தரங்கு: யாதவா கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: பார்க் பிளாசா ஓட்டல் நிர்வாகி நவநீதகிருஷ்ணன், பங்கேற்பு: பத்மராஜன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் சேர்மன் பாலன், கல்லுாரி செயலாளர் கண்ணன், முதல்வர் ராஜூ, ஏற்பாடு: வர்த்தக துறை, மதியம் 2:00 மணி.
58ம் ஆண்டு விழா: கேந்திரிய வித்யாலயா பள்ளி, நரிமேடு, மதுரை, சிறப்பு விருந்தினர்: கலெக்டர் சங்கீதா, கவுரவ விருந்தினர்: என்.ஐ.சி., தொழில்நுட்ப இயக்குனர் சுவாமிநாதன், மாலை 5:00 மணி.
மருத்துவம்
தேர்ச்சி பெற்ற பிளஸ் 2 மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை காண்பித்து இலவச கண் பரிசோதனை செய்து கொள்ளும் முகாம்: ஸ்ரீ ராமசந்திரா கண் மருத்துவமனை, குட் ஷெட் தெரு, மதுரை, பரிசோதிப்பவர்: டாக்டர் சீனிவாசன், காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை.
கண்காட்சி
அரசுப் பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்புத் துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.