Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இன்றைய நிகழ்ச்சி - மதுரை

இன்றைய நிகழ்ச்சி - மதுரை

இன்றைய நிகழ்ச்சி - மதுரை

இன்றைய நிகழ்ச்சி - மதுரை

ADDED : ஜூன் 29, 2024 04:41 AM


Google News
கோயில்

அஷ்டமி பூஜை: ஸ்ரீ ஆனந்தேஸ்வர விநாயகர் ஆஸ்திக சபா, எல்லீஸ்நகர், மதுரை, காலை 9:30 மணி.

ஆனி மாத - புரவி எடுப்பு திருவிழா: வெளிச்சிகுளத்து அய்யனார் கோயில், கோட்டநத்தம்பட்டி, மதியம் 3:00

இடைவிடா சகாய அன்னை சர்ச் பொன்விழா - தேர் பவனி, பெருவிழா திருப்பலி: அஞ்சல் நகர், மதுரை, தலைமை: முன்னாள் ஆயர் சூசைமாணிக்கம், மாலை 6:00 மணி.

பக்தி சொற்பொழிவு

தாயுமானவர்: நிகழ்த்துபவர் - கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

அஷ்டா வக்கிர கீதை: நிகழ்த்துபவர் - ஜனார்த்தனன், வேதாந்த சிரவணானந்தா ஆஸ்ரமம், 4, கீழ மாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, மாலை 6:30 மணி.

ஸ்ரீ மத் ராமாயணம் - விபீஷண சரணாகதி: நிகழ்த்துபவர் - முரளி, மதன கோபால சுவாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, மாலை 6:15 மணி முதல் இரவு 8:30 மணி வரை.

ஆதிசங்கரர் ஸ்லோகம்: நிகழ்த்துபவர் - பாலசுப்ரமணி, சிருங்கேரி சங்கர மடம், பைபாஸ் ரோடு, மதுரை, மாலை 5:00 மணி, விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம், மாலை 6:00 மணி.

பொது

இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு கருத்தரங்கு: ஊராட்சி மன்ற வளாகம், தும்மநாயக்கன்பட்டி, இயற்கை வேளாண் கருத்துரை: பேசுபவர் - இயற்கை வேளாண் அறிஞர் பாமயன், இயற்கை இடுபொருள் செய்முறை: பேசுபவர் - தமிழ்மணி, ஆரோக்கியமே ஆனந்தம்: பேசுபவர் - அன்புசிவம், ஏற்பாடு: தாளாண்மை உழவர் இயக்கம், காலை 10:00 மணி.

கதம்ப விழா: தென்னிந்திய மாநில மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு வகை திறமை விழா: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, ஜி.எம்.எஸ் அமைப்பு நிறுவனர் ராஜகுமாரி, துணை தலைவர் விஜயா தர்ஷன், ரெபா தேவி, ஏற்பாடு: தியாகம் டிரஸ்ட், நல்லுார் குழு, 'வி' தமிழ்நாடு சேம்பர் ஆப் காமர்ஸ், காலை 10:00 மணி.

இசைக் கச்சேரி: பார்ச்சூன் பாண்டியன் ஓட்டல், மதுரை, பாட்டு - சுபிக் ஷா, வயலின் - கோவிந்தராஜன், மிருதங்கம் - சுவாமிநாதன், ஏற்பாடு: ராகப்ரியா இசைக் குழு, மாலை 6:00 மணி.

ஸ்ரீ நாரதர் விருது வழங்கும் விழா: ஓட்டல் ராஜதானி, மதுரை, தலைமை: மாணிக்கம் ராமசாமி கலை, அறிவியல் கல்லுாரி ஊடகவியல் துறைத்தலைவர் பாபு சஜன் கேவின், சிறப்பு விருந்தினர்: கிருஷ்ண முத்துசாமி, ஏற்பாடு: விஸ்வ சம்வாத் கேந்திரம் தக் ஷின் தமிழ்நாடு, மாலை 5:00 மணி.

பட்டமளிப்பு விழா: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: மியூசியம் பொருளாளர் செந்தில்குமார், வரவேற்புரை: முதல்வர் தேவதாஸ், சிறப்பு விருந்தினர்: மத்திய பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணன், முன்னிலை: மியூசிய செயலாளர் நந்தாராவ், வாழ்த்துரை: காப்பாட்சியர் நடராஜன், காலை 10:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை.

முதியோர்களுக்கான வேர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, காலை 11:00 மணி.

பள்ளி, கல்லுாரி

முதலாமாண்டு மாணவர்களுக்கான புத்தாக நிகழ்வு - ஆறாம் நாள்: சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி, டி.வி.ஆர்., நகர், அருப்புக்கோட்டை ரோடு, மதுரை, காலை 9:30 மணி.

ஒரு மாணவனிடமிருந்து தொழில் முனைவோருக்கான பயணம் - தொழில் வழிகாட்டுதல்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: செயலாளர் சுந்தர், சிறப்பு விருந்தினர்கள்: லாக்ரிதமிக் டெக்னாலஜி நிறுவனர் அரவிந்த் ராகவேந்திரன், கிட்ஸ் டாக் இயக்குநர் ரச்னா பினாணி, காலை 10:00 மணி.

மருத்துவம்

தேர்ச்சி பெற்ற பிளஸ் 2 மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை காண்பித்து இலவச கண் பரிசோதனை செய்து கொள்ளும் முகாம்: ஸ்ரீ ராமச்சந்திரா கண் மருத்துவமனை, குட் ஷெட் தெரு, மதுரை, பரிசோதிப்பவர்: டாக்டர் சீனிவாசன், காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை.

கண்காட்சி

அரசுப் பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்புத் துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us