திக்... திக்... திருக்கல்யாண மண்டபம்
திக்... திக்... திருக்கல்யாண மண்டபம்
திக்... திக்... திருக்கல்யாண மண்டபம்
ADDED : ஜூன் 06, 2024 05:39 AM

மேலுார், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்தின்கீழ் உள்ள திருவாதவூர் திருமறைநாதர் கோயில் திருக்கல்யாண மண்டபம், கோயில் சுவர்களின் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுவதால் பக்தர்கள் அச்சத்தில் உள்ளனர்.
அவர்கள் கூறியதாவது: திருக்கல்யாண மண்டபத்தின் மேற்கூரை சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன.
காசி விஸ்வநாதர், விநாயகர் சன்னதி முன்புறம், மண்டபம் மற்றும் கோயில் உள்பகுதியில் உடைகல் மற்றும் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்துள்ளன. கோயிலை அறநிலையத் துறையினர் பராமரிக்க வேண்டும் என்றனர்.