/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வரிப்பிடித்தம் செய்வதில் எந்த பிரச்னை என்றாலும் பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள்தான் பொறுப்பு கருவூலத்துறை கூட்டத்தில் தகவல் வரிப்பிடித்தம் செய்வதில் எந்த பிரச்னை என்றாலும் பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள்தான் பொறுப்பு கருவூலத்துறை கூட்டத்தில் தகவல்
வரிப்பிடித்தம் செய்வதில் எந்த பிரச்னை என்றாலும் பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள்தான் பொறுப்பு கருவூலத்துறை கூட்டத்தில் தகவல்
வரிப்பிடித்தம் செய்வதில் எந்த பிரச்னை என்றாலும் பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள்தான் பொறுப்பு கருவூலத்துறை கூட்டத்தில் தகவல்
வரிப்பிடித்தம் செய்வதில் எந்த பிரச்னை என்றாலும் பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள்தான் பொறுப்பு கருவூலத்துறை கூட்டத்தில் தகவல்
ADDED : ஜூலை 24, 2024 05:41 AM

மதுரை : ''நிறுவனங்களில் வரிப்பிடித்தம் தாக்கல் செய்வதில் பணம் பெற்று வழங்கும் அலுவலருக்கே முழுப்பொறுப்புள்ளது'' என, மதுரையில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட கருவூலத்துறை சார்பில் சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு வருமான வரி பிடித்தம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. மாவட்ட கருவூல அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
உதவி அலுவலர் பாலகிருஷ்ணன், வருமான வரித்துறை அலுவலர் வெங்கடேஸ்வரன், ஆய்வாளர் கணேசன் பங்கேற்றனர். வருமான வரித்துறை துணை கமிஷனர் மதுசூதனன் பேசியதாவது: வரிவிதிப்பு ஒரு நிர்வாகத்திற்கு முதுகெலும்பு போன்றது. அர்த்தசாஸ்திரத்தில் சாணக்கியர், மலரில் தேனை வண்டு உறிஞ்சி எடுப்பது போல வரிவிதிப்பு இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மன்னர் காலங்களில் வரிவிதிப்பு இருந்தாலும் முதன்முதலாக 1860 ல்தான் சட்டப்படி வரிவிதிப்பு உருவானது. அதன்பின்னர் 1922 ல் இந்திய வருமான வரிச்சட்டம் உருவானது. பின்னர் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது 1961 வருமான வரிச்சட்டம் நடைமுறையில் உள்ளது.
அரசின் நலத்திட்டங்கள், பொருளாதார சமத்துவம் ஏற்படுவதற்கு வரிவிதிப்பு அவசியம். இது நேரடி வரிவிதிப்பு (வருமான வரி போன்றது), மறைமுக வரி (ஜி.எஸ்.டி., போன்றது) என உள்ளது. எந்த தொழிலாக இருந்தாலும் அதில் அரசும் ஒரு மறைமுக பங்குதாரர்.
அதனால் அதற்கான பங்கை கொடுத்தாக வேண்டும். ஆண்டு கடைசியில் வரிப்பிடித்தம் செய்தால் சுமையாக இருக்கும் என்பதால் முன்னதாகவே பிடிக்கப்படுகிறது. அதனை மாதந்தோறும் பிடித்தம் செய்யுமாறு சட்டம் சொல்கிறது.
வரிப்பிடித்தம் செய்வதில் எந்த பிரச்னை என்றாலும் பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள்தான் பொறுப்பு.
எனவே அதை எப்படி செய்வது என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும்.
வருமான வரியை எப்படி தாக்கல் செய்தாலும் அதை பைல் செய்து ஒப்புதல் பெறும் வரை விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார்.