/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தண்ணீருக்கு கண்ணீர் சிந்தும் வலைவீரன்பட்டி மக்கள் தண்ணீருக்கு கண்ணீர் சிந்தும் வலைவீரன்பட்டி மக்கள்
தண்ணீருக்கு கண்ணீர் சிந்தும் வலைவீரன்பட்டி மக்கள்
தண்ணீருக்கு கண்ணீர் சிந்தும் வலைவீரன்பட்டி மக்கள்
தண்ணீருக்கு கண்ணீர் சிந்தும் வலைவீரன்பட்டி மக்கள்
ADDED : ஜூன் 04, 2024 06:37 AM

கொட்டாம்பட்டி : வலைவீரன்பட்டியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மேல்நிலைத் தொட்டி சரிவர பயன்பாட்டில் இல்லை. மற்றொரு போர்வெல்லில் மோட்டார் இல்லாததால் தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
இப்பகுதி மக்களுக்கு ஊராட்சி சார்பில் போர்வெல் அமைக்கப்பட்டு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
தற்போது மேல்நிலை தொட்டிக்கு செல்லும் மின்கம்பிகள் தென்னமரத்திற்குள் செல்வதால் தினமும் மின்கம்பிகள் உரசி மின்தடை ஏற்படுவதால் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது.
செல்வம்: தினமும் மின்தடை ஏற்படுவதால் மேல்நிலைத் தொட்டி காட்சி பொருளாக உள்ளது.
தவிர கிராமத்திற்குள் ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்ட மற்றொரு போர்வெல்லில் இன்று வரை தண்ணீர் உள்ளது.
ஆனால் ஊராட்சி நிர்வாகம் மோட்டாரை கழட்டிச் சென்றதால் தண்ணீர் இருந்தும் பயன்படுத்த முடியவில்லை. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. அதனால் பல கி.மீ., தண்ணீரை தேடி அலைவதால் அதிகாரிகள் விரைந்து தண்ணீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஊராட்சி தலைவி அமிர்தம் கூறுகையில் இரண்டு நாட்களில் மோட்டார் பொருத்தி தண்ணீர் சப்ளை செய்யப்படும் என்றார்.