தோல் சிகிச்சையில் லேசரின் மகத்துவம்
தோல் சிகிச்சையில் லேசரின் மகத்துவம்
தோல் சிகிச்சையில் லேசரின் மகத்துவம்
ADDED : ஜூன் 27, 2024 05:54 AM
முகத்தில் மற்றும் தேகத்தில் ஏற்படும் மரு, மச்சம், தோல் முடிச்சு, கரும்புள்ளிகளால் அழகு குறையும். இவற்றை சிஓ2 லேசர், ரேடியோ ப்ரிக்கன்சி அப்ளேஷன், ஹைப்ரிகேட்டர், போன்ற லேசர் மற்றும் எலக்ட்ரோ சிகிச்சைகள் முழுவதுமாக தழும்பின்றி அகற்றி விடும்.
பள்ளி குழந்தைகள், நீரிழிவு நோய் உள்ளவர்கள், வியர்வை மற்றும் தண்ணீரில் அதிகம் புழங்கும் பெண்களுக்கு ஏற்படும் வைரஸ் மருக்கள், பாலுண்ணி, நகக்கண் பிரச்னைகள் போன்ற தொல்லைகளையும் இதே நவீன லேசர் சிகிச்சை கருவிகள் மூலம் அறவே நீக்கலாம்.
இளம்பருவத்தில் தவறுதலாக இட்டுக் கொண்ட 'டாட்டூக்கள்'சீருடை பணியாளர் தேர்வு, வெளிநாட்டு வேலைகளுக்கும், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கும் தடையாக அமைகிறது. அறிவியலின் வரமாக உள்ள 'கியூ ஸ்விட்ச்டு ட்யாக் லேசர்' இந்த டாட்டூக்களை வலியின்றி டாட்டூ அடையாளமின்றி தொடர்ச்சியாக நான்கு ஐந்து முறை அமர்வில் முற்றிலும் மறையச் செய்யும்.
இளம்பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், பி.சி.ஓ.டி., பிரச்னை, வம்சாவளி மரபணுக்களின் விளைவாக முகத்தில் தேவையின்றி முடிகள் தோன்றுவது உண்டு. அவர்களின் சரும நிறம், வயது, முகத்தில் உள்ள முடியின் தடிமன், கால அளவு, முன்னர் எடுத்த சிகிச்சைக்கு ஏற்றவாறு இரண்டு வகையான லேசர் சிகிச்சை அளிக்கப்படும்.
இதில் 'லாங் பல்ஸ் ட்யாக் லேசர்' இந்திய சரும நிறத்திற்கும் 'ட்ரிபிள் பல்ஸ் டையோடு லேசர்' அதிக பரப்பு இடங்களில் மற்றும் அடர்த்தியான தடிமனான முடிகளுக்கான பிரத்யேக லேசர் சிகிச்சையாக உள்ளது.
லேசர் எந்த வயதினருக்கும் யாருக்கும் தடையில்லா மருத்துவமாகும். எக்ஸ் ரே வேறு லேசர் வேறு. லேசர் பாதிப்புள்ள இடங்களில் மட்டுமே மிக துல்லியமாக செயல்படும். நீண்ட மற்றும் குறுகிய கால பக்கவிளைவுகள் லேசரினால் வருவதில்லை. அதனால் தோல் மற்றும் அழகு சிகிச்சைகளுக்கு லேசர் மருத்துவம் நவீன அறிவியலின் மகத்துவமான கொடையாகும்.
-- டாக்டர் செந்தில்குமார்
மதுரை
73735 40111