/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரையில் தினமலர் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி கோலாகலமாக துவங்கியது; ஆக.,5 வரை தமுக்கத்தில் அட்டகாசமாய் ஷாப்பிங் செய்யலாம்மதுரையில் தினமலர் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி கோலாகலமாக துவங்கியது; ஆக.,5 வரை தமுக்கத்தில் அட்டகாசமாய் ஷாப்பிங் செய்யலாம்
மதுரையில் தினமலர் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி கோலாகலமாக துவங்கியது; ஆக.,5 வரை தமுக்கத்தில் அட்டகாசமாய் ஷாப்பிங் செய்யலாம்
மதுரையில் தினமலர் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி கோலாகலமாக துவங்கியது; ஆக.,5 வரை தமுக்கத்தில் அட்டகாசமாய் ஷாப்பிங் செய்யலாம்
மதுரையில் தினமலர் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி கோலாகலமாக துவங்கியது; ஆக.,5 வரை தமுக்கத்தில் அட்டகாசமாய் ஷாப்பிங் செய்யலாம்

அணிவகுத்த பெண்கள், குழந்தைகள்
தினமலர் நடத்தும் கண்காட்சி என்பதால், கண்காட்சி துவங்கும் முன்பே பெண்கள், குழந்தைகள் ஆர்வத்துடன் தமுக்கத்தில் குவித்தனர். அழகை கூட்டும் அழகு சாதனம், பேவரிட் பேன்ஸி பேக்ஸ், டிசைனர் ஜூவல்லரி, காலணிகள், டிசைன்ஸ் சாரீஸ் ரகங்கள், விதவித ரெடிமேட் டிரஸ், வியக்க வைக்கும் ஜூட் பேக்ஸ், அசத்தலான அலங்கார மின் விளக்குகள், கலைநயமிக்க சிலைகள், மாடித் தோட்டத்திற்கான நாட்டு விதைகள் என மனதுக்கு பிடித்த பொருட்களை விரும்பி வாங்கி உற்சாகமடைந்தனர்.வெளிமாநில ஸ்டால்களிலும் மக்கள் கூட்டம் களைகட்டியது. கண்காட்சியில் பங்கேற்ற பெண்களின் வளைக்கரங்களை வண்ணமயமாக்க மெகந்தி இலவசமாக வரையப்பட்டது.
குடும்பத்துடன் மெகா ஷாப்பிங்
தினமலர் எக்ஸ்போவுக்கு வந்தவர்களில் பலர் வாஷிங் மெஷின், ஸ்மார்ட் அலைபேசி, ஹோம் தியேட்டர், கிரைண்டர், மிக்ஸி, பிரிட்ஜ், கட்டில், சோபா, ஊஞ்சல், பீரோ, லாக்கர், ஸ்மார்ட் எல்.இ.டி., டிவி, டிசைனர் லைட்ஸ் உட்பட விதவித ஷாப்பிங் செய்தனர். மெகா சோபா, ஊஞ்சல், சேர் செட்டுகளுக்கு ஆர்டர் கொடுத்து கிளம்பினர். ஸ்டால்களில் தள்ளுபடி, இலவசம், சாம்பிள்களுக்கும் பஞ்சமில்லை.
ரசிக்க.. சுருசிக்க..சுவைக்க...
'ஷாப்பிங்' செய்த திருப்தியில் அருகே இருந்த புட் கோர்ட் பக்கம் சென்ற மக்கள் அங்கிருந்த மட்டன், சிக்கன் பிரியாணி, கோலா உருண்டை, பீட்சா, பர்கர், நண்டு லாலிபாப், பிஷ் பிரை, ஸ்பைரல் சிப்ஸ், ஜூஸ், பனியாரம், கரும்பு ஜூஸ், மூலிகை டீ என போட்டி போட்டு வாங்கி ருசித்தனர்.
குட்டீஸ்கள் குதுாகலம்
குழந்தைகளுக்கான பிரத்யேக போத்தீஸ் கேம் ஸோனில் ஆடிப்பாடி விளையாட ஏராள கேம்ஸ்கள் இடம் பெற்றுள்ளன. டிவிஸ்டர் கேம், ஷார்க் கேம், பிக் டிரையின் மினி டிரையின், வாட்டர் ரோலர், ஏ.டி.வி., பைக், எலக்ட்ரிக் கார், வாட்டர் போட், பேஸ்கட் பால், பலுான் ஷூட், ஆர்ச்சரி, ஒட்டக சவாரி என குழந்தைகள் துள்ளிக்குதித்து மகிழ்ந்தனர். கலர் பலுான்களும் இலவசமாக வாங்கி மகிழ்ந்தனர்.
இன்னும் 3 நாட்களே
இப்பிரமாண்ட கண்காட்சி திங்கள் வரை இன்னும் 3 நாட்களே நடக்கவுள்ளது. கண்காட்சியை பார்க்க குழந்தைகளுடன் வாங்க. விரும்பிய பொருட்களை அள்ளிட்டு போங்க.