கால்வாய் துார்வாரும் பணி துவங்கியது
கால்வாய் துார்வாரும் பணி துவங்கியது
கால்வாய் துார்வாரும் பணி துவங்கியது
ADDED : ஜூலை 19, 2024 05:52 AM
திருமங்கலம்: மழைக்காலத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருமங்கலம் பகுதியில் தமிழ்த் தாய் நகர், குறிஞ்சி நகர், காமராஜபுரம், முகமதுஷாபுரம், என்.ஜி.ஓ., காலனி பகுதிகளில் உள்ள நீர் வரத்து கால்வாய்களை ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் துார் வாரும் பணி நேற்று துவங்கியது.
நகராட்சி தலைவர் ரம்யா, கமிஷனர் அசோக்குமார், சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர், பணி மேற்பார்வையாளர் யமுனா ஆய்வு செய்தனர்.
இப்பணிகள் 10 நாட்களுக்கு நடைபெறும் என கமிஷனர் தெரிவித்தார்.