Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நுாறு நாள் வேலையால் 'சுக்கு நுாறாகும்' விவசாய கனவு

நுாறு நாள் வேலையால் 'சுக்கு நுாறாகும்' விவசாய கனவு

நுாறு நாள் வேலையால் 'சுக்கு நுாறாகும்' விவசாய கனவு

நுாறு நாள் வேலையால் 'சுக்கு நுாறாகும்' விவசாய கனவு

ADDED : மார் 14, 2025 05:41 AM


Google News
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பகுதியில் விவசாய பணிகளுக்கு வேலை ஆள் பற்றாக்குறை, கூலி உயர்வால் நில உரிமையாளர்களான விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.

அவர்கள் கூறியதாவது: நெல், வாழை, காய்கறிகள் பயிரிட்டுள்ளோம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மல்லிகை பயிரிடப்பட்டுள்ளது. முன்பு போல் வேலைக்கு ஆட்கள் வருவதில்லை. 100 நாள் திட்டத்திற்கு சென்றுவிடுகின்றனர். அங்கு வேலை இல்லாத நாட்களில் மட்டும் இங்கு வருகின்றனர். பலர் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்கின்றனர். இதனால் நெல் நடவு, களை எடுத்தல், அறுவடை, காய்கறிகள் பறிப்பு, பூ எடுக்க ஆட்கள் கிடைப்பதில்லை.

கூலியும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மல்லிகைப்பூக்கள் எடுக்க பன்மடங்கு கூலி உயர்த்தப்பட்டு விட்டது. உரங்கள், மருந்துகளின் விலையும் உயர்ந்து விட்டது. இதனால் லாபம் கிடைப்பது அரிதாகி வருகிறது. 30 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் விவசாய வேலைக்கு வர தயங்குகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் நிலம் வைத்திருப்பவர்கள் குடும்பத்தினர் மட்டுமே விவசாய பணிகளில் ஈடுபடும் நிலையும், கூலி தொழிலாளிகளை நம்பியுள்ளவர்கள் விவசாயத்தை விட்டு வெளியேறும் நிலையும் ஏற்படும் என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us