ADDED : ஜூன் 03, 2024 03:29 AM

பேரையூர்: பேரையூர் தாலுகா எஸ். கிருஷ்ணாபுரத்தில் விநாயகர், காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
பேரையூர் முருகன் கோயிலில் புனித நீரை 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கொண்டுவந்தனர். அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி, அங்குரார்பணம், தனபூஜை, ரக் ஷாபந்தனம், கடஸ்தாபனம் முதல் கால பூஜை, பூர்ணாஹூதி நடந்தது. இரண்டாம் கால பூஜை, பூர்ணாஹூதியும், யாத்ராதானம், கடம் புறப்பாடு நடந்தது.
காலை 8:30 மணிக்கு மகாகும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.