/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்க மானியம் பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்க மானியம்
பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்க மானியம்
பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்க மானியம்
பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்க மானியம்
ADDED : ஜூலை 05, 2024 05:07 AM
மதுரை: மதுரையில் தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கான பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் கால்நடை வளர்ப்போருக்கு மானியம் வழங்கப்படுகிறது.
பாசன வசதியுடைய தென்னை, பழத்தோட்டத்தில் அரை ஏக்கர் முதல் ஒரு எக்டேர் பரப்பளவில் தீவனச்சோளம், கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், பயறு வகை, பல்லாண்டு தீவன புல் ஏதாவது ஒன்றை ஊடுபயிராக பயிரிடலாம்.
தொடர்ந்து மூன்றாண்டு காலம் பராமரிக்க ஏக்கருக்கு ரூ.3000 வீதம் எக்டேருக்கு ரூ.7500 மானியம் வழங்கப்படும். மதுரை மாவட்டத்தில் 225 ஏக்கருக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
குறு, சிறு விவசாயிகள், பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கும் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வான கிராம விவசாயிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
பயன்பெற விரும்பும் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் அருகிலுள்ள கால்நடை மருந்தக உதவி டாக்டரை அணுகலாம்.