ADDED : ஜூன் 20, 2024 04:55 AM
மதுரை: மதுரை மாவட்டத்தில் பிரதம மந்திரி மீன்வளர்ப்பு திட்டத்தின் கீழ் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
கொல்லைப்புற அலங்கார மீன்வளர்த்தல் திட்டத்தில் 2 பொது, 1 பெண், ஒரு ஆதிதிராவிடர் பிரிவினருக்கு தலா ரூ. 3 லட்சம் (இதில் மானியம் ரூ.1.8 லட்சம்) வழங்கப்படும். பயோபிளாக் குளம் அமைக்க மூன்று பிரிவினருக்கும் ரூ.7.5 லட்சம் செலவிடப்படுவதில் பொது பிரிவினருக்கு மானியம் ரூ.3 லட்சம், பெண், ஆதிதிராவிடர் பிரிவினருக்கு ரூ.4.5 லட்சம் மானியம் வழங்கப்படும். மீன்குஞ்சு வளர்ப்பு குளம் அமைப்பதற்கு செலவாகும் ரூ 7 லட்சத்தில் மூன்று பிரிவினருக்கும் ரூ.4.2 லட்சம் மானியம் கிடைக்கும்.
பயன்பெற விரும்புவோர் 15 நாட்களுக்குள், சிம்மக்கல் பேச்சியம்மன் படித்துறை ரோட்டில் உள்ள மீன்வளர்ப்புத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் படிவம் பெற்று விண்ணப்பிக்கலாம். ஆதார், ரேஷன் கார்டு, பட்டா, சிட்டா, அடங்கல், நிலத்தின் வரைபட நகலும் இணைக்க வேண்டும். விவரங்களுக்கு: 0452- 234 72000ல் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.