ADDED : ஜூலை 19, 2024 05:53 AM
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி வேதியியல் துறை சார்பில் கெம் ஸ்பெக்ட்ரா மாணவர் சங்க ஆண்டு விழா, நமது அன்றாட வாழ்வில் வேதியியல் எனும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு, அறிவியல் போட்டிகள் நடந்தன. தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன் துவக்கி வைத்தார். சுயநிதிப்பிரிவு இயக்குநர் பிரபு வரவேற்றார். கெம் ஸ்பெக்ட்ரா மாணவர் சங்க வரைவு மலரை அருளானந்தர் கல்லுாரி இணை பேராசிரியர் ராயப்பன் வெளியிட, பேராசிரியை லட்சுமி கிருத்திகா பெற்றார்.
முதல்வர் ராமசுப்பையா, மாணவர் சங்க உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். இந்தாண்டுக்கான அறிவியல் சாம்பியன் கோப்பையை நுண்ணியல் துறையினர் வென்றனர். உதவி பேராசிரியர் ராமசாமி ராஜா நன்றி கூறினார்.