ADDED : ஜூலை 24, 2024 05:32 AM
சோழவந்தான் : சோழவந்தான் அடுத்த கரட்டுப்பட்டி அருளப்பன் மகன் செபஸ்டின் சந்தோஷ் 19. மதுரையில் உள்ள கல்லுாரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். சில மாதங்களாக கல்லுாரிக்கு செல்லாமல் இருந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் பின்பக்க மரத்தில் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
அவரை மீட்டு வாடிப்பட்டி அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.