ADDED : ஜூலை 10, 2024 04:10 AM
திருமங்கலம் : ஆலம்பட்டியில் எப்.எம்., மெட்ரிக் பள்ளியில் தலைமை பண்புகளை வளர்க்கும் உத்திகளை கற்றுத்தரும் முயற்சியாக மாணவர்களே பள்ளியை நிர்வகிக்கும் வகையில் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
முதல் முயற்சியாக மாணவர் பார்லிமென்ட் தொடங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமை வகித்தார். மாணவர் ஜனாதிபதி கமலேஷ் ராஜா உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
மாணவர் சபாநாயகராக ஹரிகரன், துணை ஜனாதிபதியாக சூரியபிரேம், பிரதமராக சுகாசினி உள்ளிட்ட அமைச்சரவையினர் பதவியேற்றனர். தாளாளர் நாராயணராஜா, பொருளாளர் அழகர்சாமி, செயற்குழு உறுப்பினர் விஷ்ணுசுந்தர் மகேஷ், முதல்வர் பெட்சிமோனிகா, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.