ADDED : ஜூன் 17, 2024 12:55 AM
திருப்பரங்குன்றம்: முதல்வரின் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' இத்திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மை மாதிரி பண்ணை அமைத்தல், அங்கக இடுபொருள்கள் உற்பத்தி செய்வதற்கு குழு அமைத்து உற்பத்தி செய்தல் மையம் அமைத்தல், வேப்பமரக் கன்றுகள் வளர்த்தல், மண்புழு உரப்படுகை அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களுக்கு மானியங்கள் வழங்கப்படுகிறது.
திருப்பரங்குன்றம் விரிவாக்க மைய பகுதிகளில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. மற்ற பகுதி விவசாயிகளுக்கும் இத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என உதவி இயக்குனர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.