ADDED : ஜூலை 23, 2024 05:32 AM
மதுரை: குட்லாடம்பட்டியில் அட்மா திட்டத்தின் கீழ் தரமான விதை உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது. வேளாண் உதவி இயக்குநர் பாண்டி துவக்கி வைத்தார்.
தரமான விதை உற்பத்தி செய்து சான்று பெறுவது குறித்தும் விதைப்பண்ணை பதிவு கட்டணம், பருவத்திற்கேற்ற ரகங்கள் குறித்தும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் சிங்காரலீனா விவரித்தார். விதைப்பண்ணை பதிவுசெய்வது முதல் அறுவடை வரையுள்ள தொழில்நுட்பங்களை விதைச்சான்று அலுவலர் விஜய்குமார், பயறு வகை பயிர்களில் விதைப் பண்ணை அமைப்பது குறித்து வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் ஆனந்த் பேசினர். உதவி விதை அலுவலர் முத்துப்பாண்டியன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரியா, உதவி மேலாளர்கள் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர். 40 விவசாயிகள் பங்கேற்றனர்.