/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரையில் இரண்டாமிடம்: பா.ஜ.,வினர் மகிழ்ச்சி மதுரையில் இரண்டாமிடம்: பா.ஜ.,வினர் மகிழ்ச்சி
மதுரையில் இரண்டாமிடம்: பா.ஜ.,வினர் மகிழ்ச்சி
மதுரையில் இரண்டாமிடம்: பா.ஜ.,வினர் மகிழ்ச்சி
மதுரையில் இரண்டாமிடம்: பா.ஜ.,வினர் மகிழ்ச்சி
ADDED : ஜூன் 06, 2024 04:03 AM
மதுரை, : மதுரை தொகுதியில் அ.தி.மு.க.,வை மிஞ்சி 2ம் இடம் பெற்றதால் பா.ஜ.,வினர் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர்.
தென்மாவட்டத்தில் மதுரை மாவட்டம் எப்போதும் அ.தி.மு.க.,வுக்கு சாதகமானதே என்றாலும் மத்திய ஆட்சிக்கு என வரும்போது காங்.,- கம்யூ., என தேசிய கட்சிகளே கோலோச்சியுள்ளன.
இந்தத் தொகுதியில் பா.ஜ.,வை வளர்த்தெடுக்க வேண்டும் என கட்சியினர் ஆர்வம் காட்டியது போல, தேசிய அளவிலான நிர்வாகிகளும் மதுரை மீது கண் வைத்து செயல்பட்டனர். கூட்டணியில் அ.தி.மு.க., இல்லாததால் கட்சி பின்தங்கி விடுமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அதனால் பிரதமர் மோடியே இப்பகுதிக்கு 3 முறை வந்து சென்றார். உள்துறை அமைச்சர் அமித்ஷா ரோடு ஷோவே நடத்தினார்.
வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்தபோது வேறு தொகுதியை குறிவைத்து செயல்பட்ட மாநில பொதுச் செயலாளர் ராமசீனிவாசனை அறிவித்தனர். விருதுநகர், திருச்சியில் போட்டியிட எல்லா ஏற்பாடுகளும் செய்துவந்த நிலையில் மதுரையில் ஓட்டுகள் வசப்படுமா என அவருக்கேகூட சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில் தேர்தல் முடிவுகள் பா.ஜ.,வுக்கு மதுரையில் தோல்வியை தந்தாலும், கவுரவமான தோல்வி என்கிற ரீதியில் இருந்தன. யாருடைய ஆதரவும் இன்றி அ.தி.மு.க., வையே பின்னுக்குத் தள்ளி, 2.20 லட்சம் ஓட்டுகளுடன் 2ம் இடத்தை பா.ஜ., பெற்றுள்ளது.
கூட்டணியில் இருந்த பா.ம.க.,வுக்கு மதுரையில் சொல்லும்படியான ஆதரவு இல்லாத நிலையில், பா.ஜ., தனிஆவர்த்தனம் செய்து 2ம் இடம்பெற்றது கட்சி நிர்வாகிகளே எதிர்பாராததுதான்.
நிர்வாகிகளில் சிலர் கூறுகையில், ''உள்ளாட்சிதேர்தல்களின் அடிப்படையில் பா.ஜ.,வுக்கென 1.40 லட்சம் ஓட்டுகள் உள்ளன. பிரதமர் மோடி, அமித்ஷா உட்பட பிரமுகர்கள் வருகை, அ.தி.மு.க.,வின் பிளவு, கூட்டணியில் உள்ள அ.ம.மு.க., ஏற்கனவே இங்கு பெற்ற 80 ஆயிரம் ஓட்டுகளில் பெரும்பகுதி, குஜராத்தில் நடந்த சவுராஷ்டிரா தமிழ்சங்கமம் நிகழ்ச்சியால் அச்சமூகத்தினரின் ஆதரவு போன்றவைபா.ஜ.,வை துாக்கிவிட்டுள்ளது.
இதனுடன் கட்சியில் அமைத்த சட்டசபை, பார்லி தேர்தல் குழுக்கள்திட்டமிட்டபடி வீடுவீடாக சென்று அதிகம்பிரசாரம் செய்திருந்தாலும், தேர்தல் செலவுகளை முறையாக செய்திருந்தாலும் ஓட்டுக்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்திருக்கும். அடுத்த தேர்தல்களில் இதனை சரிசெய்வோம்'' என்றனர்.