விழிப்புணர்வு
மதுரை: உலகநேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போக்குவரத்து போலீஸ் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாட்டுத்தாவணி இன்ஸ்பெக்டர் சுரேஷ் பேசுகையில், ''ரோட்டை கடக்கும் மாணவியர் நிதானமாக கடக்க வேண்டும். அவசரப்படக்கூடாது. பஸ்சில் படிக்கட்டில் நின்று பயணிக்கக்கூடாது. பஸ் நின்ற பிறகே ஏறவும், இறங்கவும் செய்யவேண்டும்'' என்றார். எஸ்.ஐ., திலகர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதியவர்கள் நாள் விழா
திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரியில் 3,2ம் ஆண்டு மாணவியர் சார்பில் முதலாமாண்டு மாணவியரை வரவேற்கும் 'புதியவர்கள் நாள்' விழா நடந்தது.
கல்வி உதவித்தொகை
திருப்பரங்குன்றம்: தியாகராஜர் பொறியியல் கல்லுாரி மாணவர்களில் 227 பேருக்கு ரூ. 86.98 லட்சம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டது. நிறுவனர் தின விழா தாளாளர் தியாகராஜன் தலைமையில் நடந்தது. முதல்வர் பழனிநாதராஜா முன்னிலை வகித்தார். ஐ.ஐ.டி., மெட்ராஸ் ஸ்கூல் ஆப் டேட்டா சயின்ஸ் செயற்கை நுண்ணறிவு பேராசிரியர் பலராமன் ரவீந்திரன் பேசினார். டேட்டா அறிவியல் துறை தலைவர் பார்த்தசாரதி நன்றி கூறினார்.
மனித கடத்தல் எதிர்ப்பு விழிப்புணர்வு
உசிலம்பட்டி: ஆர்.சி. சிறுமலர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் மனித கடத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மனித நேயம் காப்போம் என்பதை வலியுறுத்தி மாணவியர்களின் மனித சங்கிலி விழிப்புணர்வு நடந்தது. எஸ்.ஐ., க்கள் லீலாவதி, சாந்தி, வளன் சபை தலைவி சூசையம்மாள், தாளாளர் ரோஜாமணி, தலைமை ஆசிரியை அருள்லுாயிஸ்மெர்சி, உதவி தலைமை ஆசிரியை விமலா, துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சகாயம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
மாணவர்களுக்கு சைக்கிள்
மதுரை: எம்.சத்திரப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் மூர்த்தி 151 மாணவ, மாணவியருக்கு சீருடைகளையும் வழங்கினார். அவர் பேசுகையில், ''மாணவர்கள் சாதனையாளராக திகழ அதற்கான சூழலை உருவாக்குவது, ஊக்கப்படுத்துவது அரசின் கடமை. அவ்வகையில் தமிழக அரசு இலவச பஸ்பாஸ், பாடப்புத்தகம், சீருடை, சைக்கிள் உட்பட பலவற்றையும் வழங்கி வருகிறது. சீருடைகள் தனித்தனியாக அளவெடுத்து தைக்கப்பட்டுள்ளதால் மிடுக்காக இருக்கும்'' என்றார். கலெக்டர் சங்கீதா, முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா உட்பட பலர் பங்கேற்றனர்.
கருத்தரங்கு
திருப்பரங்குன்றம்: சவுராஷ்டிரா கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சங்கம், மதுரை வைகை வடகரை லயன்ஸ் கிளப், மதுரை ஹோஸ்ட் லயன்ஸ் கிளப், கல்லுாரி வேலை வாய்ப்பு செல் மற்றும் தொழில் வழிகாட்டல் செல் சார்பில்தகவல் தொழில்நுட்பத் துறையின் முக்கிய திறன்கள்என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கு நடந்தது.முதல்வர் சீனிவாசன் துவக்கி வைத்தார். வேலைவாய்ப்பு செல் அலுவலர் ஜெயந்தி வரவேற்றார். செயலாளர் குமரேஷ் பேசினார். முன்னாள் மாணவரும், ஆஸ்திரேலியாவில் வசிக்கும்சதீஷ்பாபு,மென்பொருள் உருவாக்கல், இணைய பாதுகாப்புக்கு தேவையான திறன்கள், தரவு அறிவியல் மற்றும் தரவு பகுத்தாய்தல் குறித்து விளக்கினார்.தொழில் வழிகாட்டல் செல் கன்வீனர் ஞானகுரு நன்றி கூறினார்.