உறுதிமொழி
மதுரை: விரகனுார் கோழிமேடு கே.எல்.என்., பாலிடெக்னிக்கில் முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் உறுதிமொழி எடுக்கப்பட்டது. முதல்வர் ஆனந்தன், துணை முதல்வர் கே.பி. சகாதேவன், என்.எஸ்.எஸ்., அலுவலர் சிவக்குமார், உடற்கல்வி துறை இயக்குநர் கே. சகாதேவன் ஆகியோருடன் மாணவர்கள் பங்கேற்றனர்.
படிப்பிடை பயிற்சி முகாம்
மதுரை: தியாகராஜர் கல்லுாரி தமிழ்த் துறை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு காந்தியை அறிந்து கொள்வோம் எனும் தலைப்பில் பத்து நாள் படிப்பிடை பயிற்சி முகாம் மதுரை காந்தி மியூசியத்தில் நடந்தது. சான்றிதழ் வழங்கும் விழாவில் மாணவர் வெற்றிவேல் வரவேற்றார். காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ் தலைமை வகித்தார். மியூசிய காப்பாட்சியர் நடராஜன் முன்னிலை வகித்தார்.செயலாளர் நந்தாராவ் சான்றிதழ் வழங்கினார். பேராசிரியர் பரமசிவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாணவி கவி பாரதி நன்றி கூறினார்.
விழிப்புணர்வு முகாம்
திருநகர்: சந்தோஷ் பிசியோதெரபி கல்லுாரியில் உயர் ரத்த அழுத்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. தாளாளர் நோவா துவக்கி வைத்தார். 40 வயதிற்கு மேற்பட்ட மக்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. விழிப்புணர்வு கட்டுரைகள், ஸ்லோகம், ஓவிய போட்டி, நாடகம் நடத்தப்பட்டது. உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாணவர் முகமது அமீன் நன்றி கூறினார்.
புத்தாக்கப் பயிற்சி
மதுரை: யாதவர் கல்லுாரியில் உள்தர மதிப்பீட்டு குழு சார்பில் 'மாற்று வழியில் கல்வி கற்பித்தல்' என்ற தலைப்பில் பேராசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி நடந்தது. முதல்வர் ராஜூ தலைமை வகித்தார். முன்னாள் தாளாளர் நவநீதகிருஷ்ணன், தலைவர் ஜெயராமன், செயலாளர் கண்ணன், இயக்குநர் ராஜகோபால், லேடி டோக் கல்லுாரி இணை பேராசிரியை பிரியதர்ஷினி உள்ளிட்டோர் பேசினர்.