ADDED : ஜூன் 03, 2024 03:20 AM
மதுரை: மதுரை ஒத்தக்கடையில் யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
ஊராட்சித் தலைவர் முருகேஸ்வரி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் தென்னவன் வரவேற்றார். ஆலோசகர் பாண்டி முன்னிலை வகித்தார். உறுப்பினர் கார்த்திகேயன் தொகுத்து வழங்கினார் .
கேரள ஊரக வளர்ச்சித் துறை செயலர் ராஜமாணிக்கம் பேசினார். மாஸ்டர் அருண் குழுவின் நடனம், சிலம்பம், சுருள், பறையிசை நடந்தது. வாதானி, புங்கை உள்ளிட்ட கன்றுகளை சிலம்பு மாஸ்டர் பாண்டி வழங்கினார். வங்கி மேலாளர் மாரியப்பன், இளம் மக்கள் இயக்க நிறுவனர் குபேந்திரன், மாற்றம் தேடி நலம் அறக்கட்டளை நிறுவனர் பாலமுருகன், வருவாய் ஆய்வாளர் மணிமாறன், ஆடிட்டர் சதீஷ், செல்வி, கலைவாணி, காயத்ரி பங்கேற்றனர். ஆலோசகர் பிரபு நன்றி கூறினார்.