ADDED : ஆக 04, 2024 04:42 AM
மதுரை: மதுரை ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸில் மாணவர்களின் புத்தாக்க பயிற்சியின் ஒருபகுதியாக தொழில்முனைவோர் கருத்தரங்கு நடந்தது.
மதுரையைச் சேர்ந்த தொழில் முனைவோர் கலந்துரையாடலில் பங்கேற்று, மாணவர்களை தொழில் முனைவோராக்க ஊக்கப்படுத்தினர்.
எம்.பி.ஏ., துறைத்தலைவர் சுப்ரமணியன் தலைமை வகித்தார்.
இன்பினிட்டி மீடியா நிறுவனர் ெஷபாஸ்கான், மதுரா டிரேடர்ஸ் இயக்குநர் மகாவீர் ஜெயின், ப்ரோ எலைட் மேலாண்மை ஆலோசகர் செந்தில்குமார், புளியடி போலி நிர்வாக இயக்குநர் பாலாஜி, வான் புட்ஸ் நிறுவனர் பாலாஜி சக்திவேல், ஜே.கே. புட்ஸ் நிறுவனர் கணேஷ்குமார் பங்கேற்றனர்.