/உள்ளூர் செய்திகள்/மதுரை/ விழித்திரை புற்றுநோய் குணப்படுத்தக் கூடியதே விழிப்புணர்வு விழாவில் தகவல் விழித்திரை புற்றுநோய் குணப்படுத்தக் கூடியதே விழிப்புணர்வு விழாவில் தகவல்
விழித்திரை புற்றுநோய் குணப்படுத்தக் கூடியதே விழிப்புணர்வு விழாவில் தகவல்
விழித்திரை புற்றுநோய் குணப்படுத்தக் கூடியதே விழிப்புணர்வு விழாவில் தகவல்
விழித்திரை புற்றுநோய் குணப்படுத்தக் கூடியதே விழிப்புணர்வு விழாவில் தகவல்
ADDED : ஜூன் 03, 2024 03:24 AM
மதுரை: மதுரை அரவிந்த் கண்மருத்துவமனையில் கண்விழித்திரைப் புற்றுநோய் வாரம் துவங்கியது. மருத்துவமனையின் 'ஆர்பிட்' பிரிவு தலைவர் டாக்டர் உஷா வரவேற்று, சிகிச்சை முறைகள் குறித்து பேசினார்.
மருத்துவமனை கவுரவ தலைவர் நம்பெருமாள்சாமி, தலைவர் ரவீந்திரன், முதன்மை கண்மருத்துவர் கிம், ஆய்வுப்பிரிவு இயக்குனர் தர்மலிங்கம் பங்கேற்றனர். இச்சிகிச்சை பிரிவில் பணியாற்றும் டாக்டர்கள் மேக்னா, வினிதா, செவிலியர்கள் சுந்தரி, சித்ரா, வெங்கடேஸ்வரி, தேவராணி, மீனாவை பாராட்டினர்.
டாக்டர் உஷா கூறியதாவது: அரவிந்த் கண் மருத்துவமனையில் 'ரிங் ஆப் கோப்' என்ற அமைப்பு மூலம் கண்விழித்திரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு 20 ஆண்டுகளாக சிகிச்சை அளிக்கிறோம். 2004 - 2024 ஆண்டு வரை 10 ஆயிரத்து 433 பேர் இந்நோய்க்கு பயனடைந்துள்ளனர்.
இதில் குழந்தைகளுக்கான விழித்திரை புற்றுநோய் ஒன்றரை வயது முதல் 3 வயது வரை வரக்கூடியது. இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் உயிரையும், பார்வையையும் மீட்டெடுக்கலாம். அரவிந்த் கண்மருத்துவமனையில் அதற்கான பரிசோதனை, சிகிச்சை வசதியை 'ஆர்பிட்' பிரிவு அளிக்கிறது.
இச்சிகிச்சைக்கு ரூ.லட்சத்திற்கும் மேல் செலவாகும் நிலையில், இயலாத பலநுாறு குழந்தைகளுக்கு இலவசமாகவும் சிகிச்சை அளித்துள்ளோம் என்றார். மக்கள் தொடர்பு அலுவலர் ராமநாதன், ரெஜிதா, ரம்யா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.