மதுரையில் இடித்துக் கொட்டியது மழை
மதுரையில் இடித்துக் கொட்டியது மழை
மதுரையில் இடித்துக் கொட்டியது மழை
ADDED : ஜூன் 06, 2024 05:32 AM

மதுரை, : மதுரையில் நேற்று மாலை 5:00 மணிக்கு இடியுடன் துவங்கிய மழை ஒரு மணி நேரம் தொடர்ந்தது.
காலை முதல் வெயில் குறைந்து காணப்பட்ட நிலையில் மாலையில் இடி, மின்னலுக்கு போட்டியாக மழையும் சுழன்று வீசியது.
மழையால் மாலை 5:00 மணிக்கே இருள் சூழ்ந்த நிலையில் வாகனஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். இரவு துவங்கியும் இடைவிடாமல் துாறலாக மழை பெய்தது. மதுரை காளவாசல், அரசரடி பகுதிகளில் தொடர்ந்து கழிவுநீர் வெளியேறிய நிலையில் மழைநீரும் சேர்ந்து சாலைகளில் வெள்ளம் போல தேங்கியது.
சிறுமழைக்கே தாங்காத காளவாசல் ரோட்டின் இருபுறமும் ஓரடி ஆழத்திற்கு வெள்ளம் நின்றதால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. புதுஜெயில் ரோட்டில் இருந்து மில்கேட் வரையும், செல்லுார்பாலம் ஸ்டேஷன் சிக்னலில் இருந்து தல்லாகுளம் அரசு மருத்துவமனை வழி செல்வோர் ரோட்டில் பள்ளம் மேடு தெரியாமல் தத்தளித்த படி வாகனம் ஓட்டினர்.
நேற்று முன்தினம் மழை வரும் என எதிர்பார்த்த நிலையில் சிறு துாறலுடன் நின்றது. இரண்டு நாட்களாக மதுரையில் வெயில் குறைந்ததுடன் நேற்று மாலை திடீரென மழை பெய்ததால் குளிர்ச்சி நிலவியது.