/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மழையால் வளர்ந்த பசுந்தீவனம்; கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி மழையால் வளர்ந்த பசுந்தீவனம்; கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி
மழையால் வளர்ந்த பசுந்தீவனம்; கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி
மழையால் வளர்ந்த பசுந்தீவனம்; கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி
மழையால் வளர்ந்த பசுந்தீவனம்; கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி
ADDED : ஜூன் 12, 2024 06:17 AM

பேரையூர் : பேரையூர் தாலுகாவில் மழையால் பசுந்தீவனம் நன்றாக வளர்ந்துள்ளதால் கால்நடை விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மழை வருவதற்கு முன் கடும் வெயிலால் வறட்சி ஏற்பட்டு விவசாயிகள் கால்நடைகளை வளர்க்க முடியாமல் அவதிப்பட்டனர். ஒரு கட்டு வைக்கோல் ரூ. 250க்கு வாங்கி வந்தனர்.
தொடர் மழை பெய்ய ஆரம்பித்ததும் தோட்டங்கள் மட்டுமின்றி ரோட்டோரம் கூட பசுமை நிறைந்த பூமியாக மாறி உள்ளது. ஆடு, மாடுகளை வளர்ப்போர் பெருமூச்சு விட்டுள்ளனர். தற்போதுள்ள பசுமை இன்னும் சில மாதங்கள் நீடிக்கும் என்ற நிலையில், பல கி.மீ., துாரம் சென்று ஆடு மேய்த்த விவசாயிகள் தற்போது அருகிலேயே மேய்க்கின்றனர்.
விவசாயி முருகன்: சிறுவயதில் இருந்தே ஆடு வளர்க்கிறேன். 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை வைத்துள்ளேன். தற்போது மழை பெய்து பசுமையாகவும், கண்மாய்கள், குளங்களில் தண்ணீர் இருக்கிறது. கோடை காலங்களில் பல கி.மீ., துாரம் சென்று ஆடு மேய்த்தாலும் அவற்றுக்கு தேவையான இரையும், நீரும் கிடைப்பது சிரமமாக இருந்தது.
இந்தாண்டு மழை நன்றாக பெய்துள்ளதால் ஆடுகளுக்கு எல்லாமே எளிதில் கிடைக்கிறது. எங்கும் பசுமை நிறைந்துள்ளதால் அருகிலேயே ஆடுகளை மேய்க்கலாம். ஆடுகளும் நன்றாக வளர்ச்சி அடைந்து வருகின்றன என்றார்.