ADDED : ஜூலை 20, 2024 02:55 AM

மதுரை : மதுரை எஸ்.எஸ்.காலனி பிராமண கல்யாண மஹாலில் ஆய்குடி குமார் பாகவதர் தலைமையில் பாகவத மேளா நாம சங்கீர்த்தனம் நேற்று விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.
ஸ்ரீ ராமானந்த சரஸ்வதிசுவாமிகள் துவக்கி வைத்தார். அவருக்கு தலைவர் சங்கர நாராயணன், நிர்வாகிகள் பூர்ண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். பிராமண மஹால் செயலாளர் ராஜகோபால், பொருளாளர் ஜகன்னாதன், நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஸத் சங்கம் ஸ்ரீராமன் ஒருங்கிணைத்தார். நாளை வரை இந்த பாகவத மேளா நடக்கிறது.