ADDED : ஜூன் 06, 2024 05:21 AM
மதுரை : மதுரை நியூ செஞ்சுரிபுத்தக நிறுவனத்தில் நுால்கள் வெளியீடு, புத்தககண்காட்சி துவக்கம் பேராசிரியர் வின்சென்ட் தலைமையில் நடந்தது.மண்டல மேலாளர் மகேந்திரன் வரவேற்றார்.பேராசிரியர் ஆனந்தகுமார், வழக்கறிஞர் சாமித்துரை, கலை இலக்கிய மன்ற தலைவர் செல்லா முன்னிலை வகித்தனர்.
பேராசிரியை ரேணுகாதேவி எழுதிய 'இலக்கியமொழி' உட்பட 10 நுால்கள் வெளியிடப்பட்டன. தமிழ் வளர்ச்சித்துறை முன்னாள் இயக்குநர் பசும்பொன், கருவூலத் துறை கூடுதல் இயக்குநர்முத்துப்பாண்டியன், எழுத்தாளர்கள் ந.முருகேசபாண்டியன், கருப்பத்தேவன், ரவிசங்கர், சுமதி, வீரலட்சுமி, பரமசிவம், நேரு, தலைமையாசிரியர்ேஷக்நபி, கவிஞர்கள் சந்திரன், மஞ்சுளா, மலர்மகள் நுால்களை வெளியிட்டு பேசினர்.
அரசு மியூசிய காப்பாட்சியர் மருதுபாண்டியன், தொல்லியல் அலுவலர் ஆசைத்தம்பி, பேராசிரியர் பெரியசாமிராஜா பங்கேற்றனர். நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.