மத்திய பட்ஜெட்டை கண்டித்து மறியல்
மத்திய பட்ஜெட்டை கண்டித்து மறியல்
மத்திய பட்ஜெட்டை கண்டித்து மறியல்
ADDED : ஜூலை 29, 2024 06:47 AM
மதுரை : 'மத்திய பட்ஜெட்டை கண்டித்து ஆக. 1ல் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது' என மதுரை எம்.பி., வெங்கடேசன் கூறினார்.
அவர் கூறியதாவது:
மத்திய அரசின் பட்ஜெட் நாட்டுக்கானது இல்லை. நாற்காலிக்கான பட்ஜெட். ஆந்திரா, பீஹாரில் சிறப்பு திட்டம் அறிவித்த இந்த பட்ஜெட், மற்ற மாநிலங்களுக்கு எதுவும் வழங்கவில்லை. எனவே இது அரசியல் சந்தர்ப்பவாத பட்ஜெட்.
மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழக உள்கட்டமைப்புக்கு தந்தது குறைவு. பீஹாரில் கோசி நதி வெள்ள தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.21 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் துாத்துக்குடி, திருநெல்வேலியில் வெள்ளப் பாதிப்புக்கு ரூ.500 கோடிதான் ஒதுக்கீடு செய்தனர்.
மதுரை, கோவை மெட்ரோ திட்டம் பற்றி எதுவும் பேசவில்லை. சிறு குறு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வரி குறைப்பு இல்லை.
பா.ஜ., வந்தபின் ரயில்வேக்கு தனி பட்ஜெட் இல்லை. இன்று வரை ரயில்வே திட்டங்கள் அடங்கிய 'பிங்க் புக்' வெளியிடப்படவில்லை. இதனைக் கண்டித்து இடதுசாரி கட்சிகள் சார்பில் மதுரை ரயில்வே ஸ்டேஷன், ஒத்தக்கடை, திருமங்கலம், பகுதியில் மறியல் நடத்தவுள்ளோம் என்றார்.