/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பொறுப்பில்லாமல் பேசும் பிரேமலதா: மாணிக்கம் தாகூர் பொறுப்பில்லாமல் பேசும் பிரேமலதா: மாணிக்கம் தாகூர்
பொறுப்பில்லாமல் பேசும் பிரேமலதா: மாணிக்கம் தாகூர்
பொறுப்பில்லாமல் பேசும் பிரேமலதா: மாணிக்கம் தாகூர்
பொறுப்பில்லாமல் பேசும் பிரேமலதா: மாணிக்கம் தாகூர்
ADDED : ஜூன் 11, 2024 06:33 AM
திருநகர் : காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் கூறியதாவது: விருதுநகர் தொகுதி ஓட்டு எண்ணிக்கை சம்பந்தமாக தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். 13 சுற்றுகள் ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் வெளியானது. அப்போது நான் முன்னிலையில் இருந்தேன். தோற்றுவிடுவோம் என நினைத்து வேட்பாளர் விஜய பிரபாகரன், பவர் ஏஜெண்ட்முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் வெளியே சென்று விட்டனர்.
ஓட்டு எண்ணிக்கை முழுமையாக முடிந்த அன்றே எதுவும் தெரிவிக்காமல், மறுநாள் சென்னையில் பிரேமலதா குற்றம் சாட்டுகிறார். பொறுப்பில்லாமல் பேசுவது பிரேமலதாவிற்கு கைவந்த கலை.
தொடர்ந்து மூன்று தேர்தல்களில் தே.மு.தி.க., என்னிடம் தோற்றுள்ளது. விஜயகாந்த் இருக்கும் பொழுதே தே.மு.தி.க.,வை வென்றேன். இது மக்கள் தீர்ப்பு. தோல்வியை பிரேமலதா ஒப்புக்கொள்ள வேண்டும். பிரேமலதாவின் குற்றச்சாட்டு அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது என்றார்.