Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தற்காலிக பட்டாசு கடை அமைக்க கட்டுப்பாடு விதிமுறைகள் போலீஸ் வெளியீடு

தற்காலிக பட்டாசு கடை அமைக்க கட்டுப்பாடு விதிமுறைகள் போலீஸ் வெளியீடு

தற்காலிக பட்டாசு கடை அமைக்க கட்டுப்பாடு விதிமுறைகள் போலீஸ் வெளியீடு

தற்காலிக பட்டாசு கடை அமைக்க கட்டுப்பாடு விதிமுறைகள் போலீஸ் வெளியீடு

ADDED : ஆக 05, 2024 05:38 AM


Google News
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரையில் தற்காலிக பட்டாசு கடை அமைக்கும் வழிமுறைகளை கமிஷனர் லோகநாதன் வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கை: கடை அமைக்க விருப்பமுள்ளோர் இணைய தளத்தில் விண்ணப்பப் படிவம் ஏ.இ.5 ஐ பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதனை பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ரூ.20 நீதிமன்ற அஞ்சல் வில்லையுடன் பூர்த்தி செய்ய வேண்டும். கூடுதலாக 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள், தீயணைப்புத்துறை தடையில்லாச் சான்று, 2 வழிகளுடன் கூடிய கடையின் வரைபடம், கடை இருப்பிடத்தை சுற்றி 50 மீ., அருகிலுள்ள அமைவிடங்களின் வரைபடம், கடை முகவரி, விண்ணப்பதாரர் கையொப்பம் இடம்பெற வேண்டும்.

சொந்த கட்டடம் எனில் 2024--2025ம் ஆண்டின் முதல் அரையாண்டு வரையான சொத்து வரி ரசீது, உரிமையாளர் சம்மதக் கடிதம், வாடகை கட்டடம் எனில், 2024--2025 ஆண்டுக்குரிய முதல் அரையாண்டு வரையான சொத்து வரி ரசீது, கட்டட உரிமையாளரின் சம்மத கடிதம், வாடகை ஒப்பந்த பத்திரம் வேண்டும்.

மாநகராட்சி / பொதுப்பணித்துறை / மற்ற துறை கட்டடமாக இருப்பின் அத்துறை சார்ந்த அலுவலரின் தடையில்லா சான்று வேண்டும்.

மாநகராட்சி டி மற்றும் ஓ ரசீது, உறுதி ஆவணம், பத்திரத்தில் நோட்டரி வழக்கறிஞர் ஒப்புதல் வேண்டும். கடை அமைய உள்ள இடத்தின் போட்டோக்கள் 2 வெவ்வேறு கோணங்களில் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் குடும்ப அட்டை அல்லது ஆதார் அட்டை நகல் வேண்டும்.

ரூ.900 விண்ணப்ப உரிமம் கட்டணம். அசல் விண்ணப்பத்துடன் அனைத்து ஆவணங்களின் 3 நகல்களை இணைக்க வேண்டும்.

செப். 4 மதியம் 1:00 மணி வரை விண்ணப்பிக்கலாம். கடை நடத்தும் இடங்களை ஆய்வு, விசாரணை செய்து, திருப்தி அடைந்தால் உரிமம் வழங்கப்படும்.

சாலை ஓரக் கடைகளுக்கு உரிமம் கிடையாது. முழுமையில்லாத விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us