இடியும் வீடுகள் அச்சத்தில் மக்கள்
இடியும் வீடுகள் அச்சத்தில் மக்கள்
இடியும் வீடுகள் அச்சத்தில் மக்கள்
ADDED : மார் 14, 2025 05:49 AM

மதுரை: மதுரையில் சொக்கிக்குளம், ரேஸ்கோர்ஸ் காலனி, டி.ஆர்.ஓ., காலனி, ஜவஹர்புரம் பகுதிகளில் அரசு ஊழியர்களுக்கென வீட்டுவசதி வாரிய வீடுகள் உள்ளன. இங்கு அரசு மற்றும் அரசு சார்பு நிறுவன ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் வசிக்கின்றனர்.
ரேஸ்கோர்ஸில் மட்டும் 600க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவற்றில் பல 1960 கால கட்டங்களில் கட்டப்பட்டவை. 1990 காலகட்டத்திலும் வீடுகள் கட்டப்பட்டன. இந்த வீடுகள் பராமரிப்பின்றி சிலீங் பெயர்ந்து விழுவது, படிகள், ஜன்னல் ஸ்லாப்புகள் சேதமடைவது அன்றாட நிகழ்வாகிப் போனது. நேற்று முன்தினம் இரவில் சில வீடுகளில் சீலிங் பெயர்ந்து விழுந்ததில் குடியிருப்போர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
இங்கு வசிப்போர் கூறுகையில், ''வீட்டுவசதி வாரிய வீடுகளை பராமரிக்க அரசு ஆண்டுதோறும் நிதி ஒதுக்குகிறது. அது முறையாக செலவிடப்படாததால் வீடுகள் சேதமடைவது தொடர்கிறது. பராமரிப்பு இல்லாததால் நல்ல கட்டடங்களும் பாழாவதால் மூடிவைத்துள்ளனர். அவற்றை சரிசெய்தால் வீடின்றி தவிக்கும் ஊழியர்கள் பயன்பெறுவர்'' என்றனர்.