Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மின் திருட்டுக்கு அபராதம்

மின் திருட்டுக்கு அபராதம்

மின் திருட்டுக்கு அபராதம்

மின் திருட்டுக்கு அபராதம்

ADDED : ஜூலை 09, 2024 06:40 AM


Google News
மதுரை : தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழக மதுரைக் கோட்ட அமலாக்க அதிகாரிகள் தேனி மின்பகிர்மான வட்டத்தில் எரசக்கநாயக்கனுார், முத்துலாபுரம், உத்தமபாளையம், கம்பம், சின்னமனுார், மயிலாடும்பாறை, ஓடைபட்டி, காமாட்சிபுரம், கூடலுார், சின்னஓவலாபுரம், கன்னிசேர்வைபட்டி பகுதியில் கூட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் 32 வீடுகளில் மின் திருட்டை கண்டுபிடித்தனர். அவர்களுக்கு ரூ. 28 லட்சத்து 7 ஆயிரத்து 283ஐ அபராதமாக விதித்தனர். சம்மந்தப்பட்ட மின் நுகர்வோர் குற்றத்தை ஒப்புக் கொண்டு சமரசத் தொகையாக ரூ. ஒரு லட்சத்து 17 ஆயிரம் செலுத்தினர். இதனால் அவர்கள் மீது புகார் எதுவும் பதிவு செய்யவில்லை.

மின்திருட்டு குறித்து பொதுமக்கள் 94430 37508 ல் தெரிவிக்கலாம் என செயற்பொறியாளர் பிரபாகரன் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us