/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குப்பையை வேடிக்கை பார்க்கும் ஊராட்சிகள் குப்பையை வேடிக்கை பார்க்கும் ஊராட்சிகள்
குப்பையை வேடிக்கை பார்க்கும் ஊராட்சிகள்
குப்பையை வேடிக்கை பார்க்கும் ஊராட்சிகள்
குப்பையை வேடிக்கை பார்க்கும் ஊராட்சிகள்
ADDED : ஜூலை 29, 2024 06:57 AM

பேரையூர் : பேரையூரில் இருந்து சாப்டூர், உசிலம்பட்டி, வத்ராப், டி.கல்லுப்பட்டி, எம். சுப்புலாபுரம் மாநில நெடுஞ்சாலைகளில் குப்பை, மது பாட்டில்கள், இறைச்சி கழிவுகளை கொட்டுவது தொடர்கதையாகியுள்ளது.
இதனால் ரோட்டோரம் குப்பை கிடங்காக மாறியுள்ளன.
பல இடங்களில் குப்பை, இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் இவற்றில் இருந்து வரும் துர்நாற்றம் அவ்வழியாக செல்வோரை முகம் சுளிக்க வைக்கிறது. ஊராட்சிகளும் இந்த குப்பையை அகற்றுவது கிடையாது.
குப்பையை ரோட்டின் ஓரங்களில் கொட்டாமல் இருக்க பொதுமக்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.