ADDED : ஜூலை 07, 2024 02:30 AM
நாட்றம்பள்ளி: திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி பி.டி.ஓ., அலுவலகத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும், அரசின் திட்டங்கள் குறித்து கலெக்டர் தர்ப்பகராஜ் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, தெக்குப்பட்டு ஊராட்சி தலைவர் ஜலபதி, வளர்ச்சி திட்டப்பணிகளில் கவனம் செலுத்தாமல் மெத்தனமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து, நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். அதன்படி, நேற்று பி.டி.ஓ, சதானந்தம், ஊராட்சி செயலர் ஜலபதியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.