/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குறுவை சாகுபடிக்கு நெல் விதைகள் தயார் குறுவை சாகுபடிக்கு நெல் விதைகள் தயார்
குறுவை சாகுபடிக்கு நெல் விதைகள் தயார்
குறுவை சாகுபடிக்கு நெல் விதைகள் தயார்
குறுவை சாகுபடிக்கு நெல் விதைகள் தயார்
ADDED : ஜூன் 06, 2024 04:04 AM
மதுரை, : மதுரை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கான நெல்விதைகள் தயார் நிலையில் உள்ளதாக வேளாண் துறை இணை இயக்குநர் சுப்புராஜ் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
சம்பா சாகுபடிக்கான 125 முதல் 130 நாட்கள் வயதுடைய கோ 52, ஏ.டி.டி. 54, என்.எல்.ஆர்.34449 ரகங்களும் குறுவை சாகுபடிக்கான 115 நாட்கள் வயதுடைய கோ 51, 55, ஆர்.என்.ஆர். 15048, ஜெ.ஜி.எல். 1798 ரகங்களின் விதைகள்130 டன் அளவு இருப்பில் உள்ளது.
ஜூன் முதல் ஆகஸ்ட் வரையான குறுவை சீசனுக்கான நெல்லுக்கு விதை கிராமத் திட்டத்தின் கீழ் ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு தேவையான நெல் விதைகள் 50 சதவீத மானிய விலையில் தரப்படுகிறது.
தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஒரு விவசாயிக்கு 5 ஏக்கருக்கு தேவையான நெல் விதைகளை 50 சதவீத மானியத்தில் பெறலாம்.
வேளாண் துறையின் கீழ் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களை அணுகலாம் என்றார்.