/உள்ளூர் செய்திகள்/மதுரை/ போலீஸ் லத்தியால் சிறுவன் கண் பாதிப்புரூ.12.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு போலீஸ் லத்தியால் சிறுவன் கண் பாதிப்புரூ.12.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
போலீஸ் லத்தியால் சிறுவன் கண் பாதிப்புரூ.12.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
போலீஸ் லத்தியால் சிறுவன் கண் பாதிப்புரூ.12.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
போலீஸ் லத்தியால் சிறுவன் கண் பாதிப்புரூ.12.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
ADDED : ஜூலை 31, 2024 12:41 AM
மதுரை:மதுரையை சேர்ந்த, 17 வயது சிறுவன், 2016ல் டூ - வீலர் ஓட்டிச் சென்றார்; உடன் இரு நண்பர்கள் சென்றனர். சமயநல்லுார் - விளாங்குடி ரோடு மின் வாரிய அலுவலகம் அருகே ஒரு போலீஸ்காரர் வாகன சோதனையில் ஈடுபட்டார். லத்தியை காண்பித்து டூ - வீலரை நிறுத்த முயற்சித்தார். அப்போது, டூவீலர் ஓட்டிய 17 வயது சிறுவன் முகத்தில் லத்தி இடித்ததில், அவரது வலது கண்ணில் காயம் ஏற்பட்டது.
சமயநல்லுார் போலீசார் வழக்கு பதிந்தனர். சிறுவனின் தாய் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
போலீஸ்காரர் லத்தியால் தாக்கியதில் என் மகனின் வலது கண் பார்வையை இழந்துள்ளார். அவரால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. கல்வி பாதித்துள்ளது. 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரி மதுரை கலெக்டர், எஸ்.பி.,க்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி சி.சரவணன் விசாரித்தார். நீதிபதி: மனுதாரர் மகனின் வலது கண்ணில் பார்வையிழப்பு ஏற்பட்டுள்ளது. அவர் வழக்கமான பணியை தொடர வாய்ப்பில்லை. ஹெல்மெட் அணியாமல் 2 பேருடன் பயணித்தபோது மனுதாரரின் மகனை போலீஸ்காரர் தடுக்க முயற்சித்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
மனுதாரரின் மகனை டூ - வீலர் ஓட்ட அனுமதித்திருக்கக்கூடாது. மனுதாரரின் மகன் மீது தவறு உள்ளது. ஒரு பெற்றோராக தன் மகனை சட்டத்திற்கு புறம்பாக தவறு செய்வதற்கு துணையாக இருந்திருக்கக்கூடாது என்பதில் கவனத்துடன் செயல்பட்டிருக்க வேண்டும்.
அதேசமயம் மனுதாரரின் மகனுக்கு காயம் ஏற்பட்டதில் எந்த நியாயமும் இல்லை. மனுதாரரின் மகனுக்கு ஏற்பட்ட காயத்திற்கு இழப்பீடாக, 12.50 லட்சம் ரூபாயை 6 சதவீத வட்டியுடன் கலெக்டர் வழங்க வேண்டும்.
போலீஸ்காரர் கடமையின்போது சற்று வரம்பு மீறியுள்ளார். அவரை தண்டிக்க தேவையில்லை.
இவ்வாறு உத்தரவிட்டார்.