/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஒரு லட்சம் நெல் மூடைகள் தேக்கம் மேலுார் விவசாயிகள் கலக்கம் ஒரு லட்சம் நெல் மூடைகள் தேக்கம் மேலுார் விவசாயிகள் கலக்கம்
ஒரு லட்சம் நெல் மூடைகள் தேக்கம் மேலுார் விவசாயிகள் கலக்கம்
ஒரு லட்சம் நெல் மூடைகள் தேக்கம் மேலுார் விவசாயிகள் கலக்கம்
ஒரு லட்சம் நெல் மூடைகள் தேக்கம் மேலுார் விவசாயிகள் கலக்கம்
ADDED : மார் 13, 2025 05:24 AM

மேலுார்: மேலுார் பகுதியில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையங்களில் எடையிட்ட நெல் மூடைகளை கோடவுனிற்கு கொண்டு செல்ல லாரிகள்இல்லாததால், தேங்கி கிடக்கின்றன.
மேலுாரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 30 இடங்களில் கொள்முதல் நிலையம் ஜன. 20 முதல் செயல்படுகிறது. இந் நிலையங்களில் எடை வைத்த நெல்லை 24 மணி நேரத்திற்குள் திருவாதவூரில் உள்ள கோடவுனிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது விதி.
நெல்லை கோடவுனிற்கு கொண்டு செல்ல 60 லாரிகள் வைத்திருக்கும்தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவர் 160 லாரிகள்வைத்திருப்பதாக முறைகேடாக ஒப்பந்தம் எடுத்துஉள்ளார். அதனால் கொள்முதல் நிலையங்களில் 10 நாட்களுக்கு மேலாக நெல் மூடைகள் தேங்கி கிடக்கின்றன. இதன்காரணமாக எடை குறைவதோடு மழையில் நெல் நனைவதால் முளைத்து வீணாகிறது. அதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
விவசாயி ரவி கூறியதாவது:
ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் செலவு செய்து உற்பத்தி செய்த நெல்லை கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு செல்கிறோம். எடை வைத்த நெல்லை ஏற்ற லாரி வராமல் 30 கொள்முதல் நிலையங்களில் லட்சத்திற்கும் மேலான மூடைகள் தேங்கி கிடக்கின்றன. இதனால் நெல்லை கொட்டி வைக்க இடமின்றி அருகில் உள்ள இடங்களில் 10 நாட்களுக்கு மேலாக போட்டு வைத்துஉள்ளோம். நெல்லை பாதுகாக்க இரவு பகலாக காத்து கிடப்பதால் மன உளைச்சலுக்கும் ஆளாகிறோம். கலெக்டர் தலையிட்டு கொள்முதல்நிலைய மூடைகளை கோடவுனுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.
மண்டல மேலாளர் ஹேம சுந்தரி கூறுகையில், ஓரிரு நாளில் நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து கோடவுனிற்கு நெல் மூடைகள் கொண்டு செல்லப்படும் என்றார்.