/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரைக்கு வருகிறது நீச்சலுக்கான ஒலிம்பிக் அகாடமி மதுரைக்கு வருகிறது நீச்சலுக்கான ஒலிம்பிக் அகாடமி
மதுரைக்கு வருகிறது நீச்சலுக்கான ஒலிம்பிக் அகாடமி
மதுரைக்கு வருகிறது நீச்சலுக்கான ஒலிம்பிக் அகாடமி
மதுரைக்கு வருகிறது நீச்சலுக்கான ஒலிம்பிக் அகாடமி
ADDED : ஜூன் 28, 2024 01:10 AM
மதுரை : மதுரை நீச்சல் வீரர், வீராங்கனைகளின் பத்தாண்டு கோரிக்கையான சர்வதேச நீச்சல் குளம், டைவிங் நீச்சல் குளம் மதுரையில் அமைக்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள 25 மீட்டர் நீச்சல் குளத்தில் பயிற்சி பெறும் வீரர், வீராங்கனைகள் தேசிய விளையாட்டுப் போட்டிகள் வரை பதக்கங்களை வென்று வருகின்றனர். 2014 ம் ஆண்டு இங்கு சர்வதேச நீச்சல் குளம் அமைக்க வேண்டுமென மதுரை மாவட்ட நீச்சல் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
2019 ல் ரூ.6 கோடி பொதுப்பணித்துறையின் திட்டமதிப்பீடு பெற்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு இத்திட்டம் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. நான்காண்டுகளாக ஒப்புதல் கிடைக்காத நிலையில் நேற்று அமைச்சர் உதயநதி மதுரையில் சர்வதேச நீச்சல் குளம், டைவிங் நீச்சல்குளம் அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தற்போது 3.5 அடி முதல் 6 அடி ஆழத்தில் 25 மீட்டர் நீளத்திற்கு 8 டிராக் நீச்சல் குளம் உள்ளது. இதை பயிற்சி நீச்சல் குளமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அருகிலேயே 50 மீட்டர் நீளம், 25 மீட்டர் அகலத்தில் 6 அடி ஆழத்திற்கு 10 டிராக் வரிசையில் சர்வதேச போட்டிகள் நடத்தும் வகையில் புதிய நீச்சல் குளம் அமைக்கப்படும். பார்வையாளர்கள் கேலரி, உடைமாற்றும் அறை, கழிப்பறை, குடிநீர் வசதிகள் செய்யப்படும். இந்த நீச்சல் குளத்தில் 6 பேர் அணிகளுக்கு இடையிலான வாட்டர் போலோ' பந்து விளையாட்டுப்போட்டியும் நடத்தப்படும்.
மேலும் டைவிங் நீச்சல் குளம் 25 க்கு 20 மீட்டர் நீள அகலத்தில் 5 மீட்டர் ஆழத்தில் டைவிங் போர்டு உடன் அமைக்கப்படும். இதில் சர்வதேச நீச்சல் விளையாட்டுகள் நடத்தப்படும். இத்துடன் கூடுதலாக டைமிங் போர்டு' அமைக்க வேண்டும் என மாவட்ட நீச்சல் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அவர்கள் கூறுகையில், தற்போது வரை நீச்சல் வீரர், வீராங்கனைகள் போட்டி ஆரம்பித்து எல்லையைத் தொடும் போது ஒவ்வொருவருக்கும் ஒருவர் தனியாக நின்று அவர்கள் கடந்த நேரத்தை வினாடிகள் வரை குறிப்பிட்டு தனியாக எழுதுகின்றனர். இதற்கு பதிலாக டைமிங் போர்டு' அமைத்தால் வீரர் குளத்தில் குதித்த வினாடியில் இருந்து எல்லையைத் தொடும் வரை துல்லியமாக வினாடிகளை கணக்கிட்டு டிஜிட்டல் போர்டில் தெரிவித்து விடும். வெற்றியாளரை குழப்பம் இல்லாமல் தேர்ந்தெடுக்கும் இந்த முறை சென்னை வேளச்சேரி நீச்சல்குளத்தில் உள்ளதால் இங்கும் டைமிங் போர்டு' அமைக்க வேண்டும்'' என்றனர்.