/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பாசன கால்வாய் பாலத்தை உடைத்து ஆக்கிரமிப்பு பாசன கால்வாய் பாலத்தை உடைத்து ஆக்கிரமிப்பு
பாசன கால்வாய் பாலத்தை உடைத்து ஆக்கிரமிப்பு
பாசன கால்வாய் பாலத்தை உடைத்து ஆக்கிரமிப்பு
பாசன கால்வாய் பாலத்தை உடைத்து ஆக்கிரமிப்பு
ADDED : ஜூலை 21, 2024 05:04 AM
மதுரை: வைகை - திருமங்கலம் பிரதான பாசன 4வது பிரிவு சிறிய பாசன கால்வாய் ரோட்டின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தை இடித்து தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளதால் பாசனத்திற்கு தண்ணீர் செல்லவில்லை என விவசாயிகள் கலெக்டர் சங்கீதாவிடம் மனு கொடுத்தனர்.
வைகை - திருமங்கலம் பிரதான பாசன கால்வாய் நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் ராமன் கூறியதாவது:
வாலாந்துாரில் இருந்து 10 கி.மீ., துாரத்திற்கு வைகை - திருமங்கலம் பிரதான பாசன 4வது பிரிவு சிறிய பாசன கால்வாய் ரோடு செல்கிறது. அதில் செல்லம்பட்டி - திடியன் பிரிவு ரோட்டில் இருந்து முண்டுவேலம்பட்டி - பாண்டிகோயில் வரையான 3 கி.மீ., துாரத்திற்கு பாசன கால்வாய் ரோட்டை தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். முண்டுவேலம்பட்டி - பாண்டிகோயில் அருகே 200 மீட்டர் துாரத்தில் கால்வாயின் குறுக்கே உள்ள பாலத்தை உடைத்துள்ளனர். பாலத்தை மூடி ஆக்கிரமித்துள்ளதால் தண்ணீர் தொடர்ந்து செல்ல முடியவில்லை. பாலத்தை தாண்டியுள்ள பகுதி விவசாயிகளுக்கு பாசன தண்ணீர் கிடைக்காததால் விவசாயம் செய்யவில்லை.
கால்வாய் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி செல்கிறது. ஆக்கிரமிப்பாளர்கள் தெற்கு வடக்காக நிலம் வைத்துள்ளதால் கால்வாயை மொத்தமாக ஆக்கிரமித்துள்ளனர் என்றார். பெரியாறு வைகை வடிநில கோட்டம் 1 உதவி செயற்பொறியாளர் அன்பரசுவிடம் கேட்டபோது, பிரச்னைக்குரிய பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு விவசாயிகளுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்'' என்றார்.